/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளியை கொலை செய்தவர் தற்கொலை
/
தொழிலாளியை கொலை செய்தவர் தற்கொலை
ADDED : ஜன 20, 2024 12:51 AM

அன்னுார்:மதுபோதையில், சக தொழிலாளியை இருவர் அடித்துக் கொன்றனர். கொலையாளிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.
கோவையை சேர்ந்த பாலு, அன்னுார் அருகே அல்லப்பாளையத்தில், வீடு கட்டும் பணியை கடந்த மாதம் துவக்கினார்.
கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டு, கோவை, சிவானந்தா காலனியில் வசித்து வந்த அசோக்குமார், 48, நாகையை சேர்ந்த சதீஷ், 22, முருகையா, 72 ஆகியோர் கட்டடம் கட்டும் பணியை செய்தனர்.
சம்பவத்தன்று, கட்டுமான பணி இடம் அருகே, ஒரு சடலம் புதைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கண்டு, அன்னுார் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெய்சிங் தலைமையில் மருத்துவக் குழுவினர், தாசில்தார் காந்திமதி முன்னிலையில், உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். இறந்தவர் அசோக்குமார் என்பது தெரிய வந்தது.
இதற்கிடையில், ஊட்டி லவ்டேல் அருகில், சதீஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை நடத்திய போலீசார், நேற்று முன் தினம் இரவு, முருகையாவை கைது செய்தனர்.
மூவரும் ஐந்து நாட்களுக்கு முன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், சதீஷ், முருகையா ஆகியோர் சேர்ந்து, அசோக்குமாரை கொலை செய்ததும், போலீசுக்கு பயந்து சதீஷ் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.