/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவியுடன் பேசியவரை கத்தியால் குத்தியவர் கைது
/
மனைவியுடன் பேசியவரை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : ஆக 22, 2024 02:22 AM
தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
கோவில்பாளையம் அருகே கீரணத்தத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி, 35. இவரது மனைவி சந்தியா, 34. இருவரும் கோவை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். விளாங்குறிச்சி, தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 42. தனியார் பவுண்டரி தொழிலாளி. வேலுசாமி, சுப்ரமணியத்திடம் தனது மனைவி சந்தியாவிடம் பேச வேண்டாம் என கூறி வந்துள்ளார்.
நேற்று அதிகாலை விளாங்குறிச்சியில் உள்ள பேக்கரி முன்புறம் சுப்பிரமணி டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அங்கு வந்த வேலுசாமி கத்தியால் சுப்ரமணியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா கத்தியால் குத்திய வேலுசாமியை கைது செய்து, அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.