/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் துவங்கியது
/
மீண்டும் மஞ்சப்பை பிரசாரம் துவங்கியது
ADDED : ஜன 31, 2025 11:55 PM

பெ.நா.பாளையம்; பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், துணி பைகளை பயன்படுத்துமாறும், மக்களை வலியுறுத்த, தமிழக அரசு சார்பில் 'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகங்களின் முன்பு, அந்தந்த பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியன இணைந்து, விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகளை நிறுவியுள்ளது.
அதில், 'மஞ்சப்பை என்பது அவமானம் அல்ல; அடையாளம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மஞ்சப்பை எடுத்துச் செல்வதை ஊக்குவிக்கும் பொருட்டு மஞ்சப்பை இணையதளம், மஞ்சப்பை செயலி ஆகியனவும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
உலக அளவில் பிளாஸ்டிக் குப்பை அதிகரித்து வருகிறது. இதனால் வடிகால்கள் அடைத்து வெள்ளம் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த, 45 ஆண்டுகளில், 10 மடங்கு பிளாஸ்டிக் குப்பை கடலில் அதிகரித்துள்ளது. பெருங்கடலில் பிளாஸ்டிக் நுண் துகள்களை உணவாக கருதி, மீன்கள் உட்கொள்கின்றன. இறுதியாக மீன்களை உட்கொள்ளும் மனிதர்களை அது வந்தடைந்து, கேடு ஏற்படுத்துகிறது என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.