/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ முகாம் 1,076 பேர் பங்கேற்பு
/
மருத்துவ முகாம் 1,076 பேர் பங்கேற்பு
ADDED : நவ 17, 2024 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கையன்புதுார் அரசு பள்ளியில், மருத்துவ முகாம் நடந்தது. இதில், பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சி தலைவர் ராம்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, வட்டார மருத்துவ அலுவலர் அக்னீஸ் கோல்டா, மருத்துவ அலுவலர்கள் மற்றும் சொக்கனுார், கல்லாபுரம் ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில், எலும்பு மூட்டு சிகிச்சை, பல், கண், தோல் மருத்துவ சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 1,076 பேர் பங்கேற்று பங்கேற்று பயனடைந்தனர்.