/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' நாளிதழின் மெகா கோலப்போட்டி வரும், 12 ம் தேதி நடக்கிறது
/
'தினமலர்' நாளிதழின் மெகா கோலப்போட்டி வரும், 12 ம் தேதி நடக்கிறது
'தினமலர்' நாளிதழின் மெகா கோலப்போட்டி வரும், 12 ம் தேதி நடக்கிறது
'தினமலர்' நாளிதழின் மெகா கோலப்போட்டி வரும், 12 ம் தேதி நடக்கிறது
ADDED : ஜன 10, 2025 12:33 AM
கோவை,; 'தினமலர்' நாளிதழ் சார்பில், வரும், 12ம் தேதி நடக்க உள்ள மெகா கோலப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் அதிகாலை வீட்டு வாசலில் கோலமிடுவதில் பல்வேறு அறிவியல் சூட்சமங்கள் உள்ளன.  இன்றும் மார்கழி என்றாலே பெண்களிடம் புது ஆர்வம் பிறந்து விடுகிறது. மார்கழி பிறக்கும் முன்னரே, கலர், கலர் பொடிகளை வாங்கி அவற்றை கோல மாவுடன் கலந்து தயாரித்து வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
கோலமிடும் கோல மங்கையருக்கு அரிய வாய்ப்பை 'தினமலர்'  நாளிதழ் வழங்குகிறது.
பெண்களின் கைவண்ணத்தை ஒரு கை பார்க்க, வரும், 12ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று, மார்கழி விழாக்கோலத்தின் ஒரு பகுதியாக, மெகா கோலப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியை தி சென்னை சில்க்ஸ், புரோஜோன் மால், இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா நிறுவனம், ஸ்ரீ பேபி பிராபர்டீஸ் ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.
கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் காலை 8:00 முதல் காலை 10:00 மணி வரை போட்டி நடக்க உள்ளது. இன்று மாலை 6:00 மணிக்குள் முன்பதிவு செய்வது அவசியம்.
98940 09213, 98940 09311 ஆகிய எண்களில் முன்பதிவு மேற்கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.
கோலம் போடுவதற்கான அனைத்து பொருட்களையும் போட்டியாளர் கொண்டு வர வேண்டும். கோலம் போட, 4 X 4 அளவில் இடம் ஒதுக்கப்படும். புள்ளிக்கோலம், ரங்கோலி, பூக்கோலம் என எந்த கோலம் வேண்டுமானாலும் போடலாம். கோலமிட இரண்டு மணி நேரம் ஒதுக்கப்படும்.
துணைக்கு ஒருவரை அழைத்து வரலாம். போட்டி நடக்கும் இடத்துக்கு, 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
புல்லிக்கோலம், ரங்கோலி, பூக்கோலம், ஆகிய ஒவ்வொரு பிரிவிலும், வெற்றி பெறுவோருக்கு, கிரைண்டர், மிக்ஸி, குக்கர் ஆகிய பரிசுகள் வழங்கப்படும்.

