/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறகடித்து பறந்த நினைவுகள் சி.ஐ.டி., கல்லூரியில் வந்ததே!
/
சிறகடித்து பறந்த நினைவுகள் சி.ஐ.டி., கல்லூரியில் வந்ததே!
சிறகடித்து பறந்த நினைவுகள் சி.ஐ.டி., கல்லூரியில் வந்ததே!
சிறகடித்து பறந்த நினைவுகள் சி.ஐ.டி., கல்லூரியில் வந்ததே!
ADDED : ஜூலை 23, 2025 09:41 PM

கோவை; கோவை சி.ஐ.டி. கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், 1991-1994 மற்றும் 1995ம் ஆண்டுகளில் பொறியியல், பி.எஸ்.சி., அப்ளைடு சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவுகளில் பயின்ற மாணவர்கள், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்லூரியில் சந்தித்து, தங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பு நிகழ்வில், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, 178 முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரிலும், வீடியோ கால் வாயிலாகவும் பங்கேற்றனர்.
10க்கு மேற்பட்ட முன்னாள் பேராசிரியர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்கள் முன்னிலையில் மாணவர்கள், வகுப்பறைகளில் அமர்ந்து, கல்வி பயின்ற காலத்தை மீண்டும் நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர்.
கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பம்சமாக, கல்லூரி விடுதியில் தங்கிய மாணவர்களின் விடுதி நாட்கள் நினைவாக, மாணவர்கள் விடுதியில் உணவருந்தி மகிழ்ந்தனர்.