தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மெய்சிலிர்க்க வைத்த 'சாருகேசி' நாடகம்

மெய்சிலிர்க்க வைத்த 'சாருகேசி' நாடகம்

மெய்சிலிர்க்க வைத்த 'சாருகேசி' நாடகம்


ADDED : மார் 13, 2023 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2023 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடந்த, சாருகேசி நாடகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது.

பிரபல திரைப்பட நடிகரும், நாடக கலைஞருமான ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கத்தில், வெங்கட் கதை வசனம் எழுதிய சாருகேசி நாடகம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள, நடராஜர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றப்பட்டது.

இசை கலைஞனின் வாழ்க்கையில், அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் சாருகேசி.

இசை வித்வான் சாருகேசியாக பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக, ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதித்து, தன்னை மறந்தவராக நடித்த காட்சிகளும், போலீஸ் ஸ்டேஷனில் குற்றவாளி ஒருவருடன் சேர்ந்து பாடும் காட்சிகளும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது. ராஜேஷ் வைத்யாவின் இசையும், அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களும் நாடகத்துக்கு கூடுதல் வலிமை சேர்த்தன.

ஒட்டு மொத்தமாக இரண்டு மணி நேர நாடகம், அரசியல், காமெடி, இசை என அனைத்து தரப்பு மக்களையும் தன் வசப்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us