/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நள்ளிரவில் பூத்த நிஷாகந்தி மலர்கள்
/
நள்ளிரவில் பூத்த நிஷாகந்தி மலர்கள்
ADDED : ஆக 13, 2025 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நள்ளிரவில் நிஷாகந்தி மலர்கள் பூத்தன.
நிஷாகந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவில், 12:00 மணிக்கு மேல் பூக்கும் இயல் புடையது.
நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் கூடலூர் கவுண்டம்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் வீட்டில் இரவு, 12:00 மணிக்கு ஐந்து நிஷாகந்தி மலர்கள் ஒரே நேரத்தில் பூத்தன.
நள்ளிரவில் பூத்த மலர்களை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வந்து ஆவலுடன் பார்த்துச் சென்றனர்.