sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நலம் பெறும் மாணவர்களின் மனம்; வந்தது 'கற்கை நன்றே' திட்டம்

/

நலம் பெறும் மாணவர்களின் மனம்; வந்தது 'கற்கை நன்றே' திட்டம்

நலம் பெறும் மாணவர்களின் மனம்; வந்தது 'கற்கை நன்றே' திட்டம்

நலம் பெறும் மாணவர்களின் மனம்; வந்தது 'கற்கை நன்றே' திட்டம்


ADDED : ஜூன் 25, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும், உளவியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண, உளவியல் சார்ந்த கவுன்சிலிங் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

2024-2025 கல்வியாண்டில், தன்னார்வல அமைப்பு வாயிலாக 64 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்காக உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், குடும்ப சூழல், தேவையற்ற பழக்கவழக்கங்கள், தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட பிரச்னைகளால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, நடப்பு கல்வியாண்டில் (2025-2026) 'கற்கை நன்றே' திட்டம் வழியே, மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உளவியல் ஆலோசனைகள் தொடர்ச்சியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆர்.எஸ்.புரம் (மேற்கு), சித்தாபுதூர் ஆகிய 6 மேல்நிலைப்பள்ளிகள், கே.கே.புதூர், ராமலிங்கம் காலனி உள்ளிட்ட 7 உயர்நிலைப்பள்ளிகள், பி.என்.பாளையம், மசக்காளிபாளையம் ஆகிய 4 ஆரம்பப்பள்ளிகள் மற்றும் 15 நடுநிலைப்பள்ளிகளில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மொத்தம் 32 பள்ளிகளுக்கும், தலா ஒருவர் என்ற அளவில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 8 மணி நேரம் உளவியல் வகுப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தும் வகையில், அவர்களை தடுக்கக்கூடிய உளவியல் தடைகளை, அடையாளம் காண்பதும், தீர்வுகள் வழங்குவதும் அவசியம். இதற்காகவே, இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் நோக்கமும் இதன் வாயிலாக நிறைவேறும்' என்றார்.






      Dinamalar
      Follow us