/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருந்து சரியா கொடுக்கறாங்களா நோயாளியிடம் தொலைபேசியில் விசாரித்த அமைச்சர்

ADDED : மார் 23, 2025 11:08 PM
அன்னுார் : அன்னுார் அருகே திடீர் ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன் நோயாளியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
அன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், பொகலுாரில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.
இருதய நோயாளிகளுக்கு மருந்து வழங்கப்படும் பதிவேட்டை ஆய்வு செய்து அதில் மருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டார்.
நீங்கள் இருதய பிரச்சனைக்கு மருந்து வாங்கினீர்களா, சரியாக தருகிறார்களா என்று அமைச்சர் கேட்டார். நோயாளி பதிலளிக்கையில் 'மருந்து சரியாக தருகின்றனர்' என்றார். ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுற்றிப் பார்த்த அமைச்சர் இது ஒரு மாடல் ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது என பாராட்டு தெரிவித்துவிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, டாக்டர் இலக்கியா உள்பட மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.