/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி: அசத்திய வீரர், வீராங்கனைகள்
/
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி: அசத்திய வீரர், வீராங்கனைகள்
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி: அசத்திய வீரர், வீராங்கனைகள்
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி: அசத்திய வீரர், வீராங்கனைகள்
ADDED : நவ 04, 2025 12:28 AM

கோவை:  மாவட்ட அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி, சரவணம்பட்டியில் நடந்தது. இதில், வீராங்கனை யோகிதா, 9-11, 3-11, 11-9 11-5, 11-8 என்ற புள்ளிகளில் வீரர் சங்கரை வென்றார். வீரர் ரியான்ஸ் நரசிம்மன், 11-6, 11-6, 11-6 என்ற புள்ளி கணக்கில் வீரர் ஹரி நாராயணனை வென்றார்.
வீரர் ரூபக், 11-6, 11-7, 11-7 என்ற புள்ளிகளில் வீரர் பிரசாந்தை வென்றார். வீரர் பிரசாந்த், 11-6, 11-5, 11-7 என்ற புள்ளிகளில் வீரர் அகிலையும், வீரர் ரூபக், 11-4, 7-11, 3-11, 11-3, 13-11 என்ற புள்ளிகளில் வீரர் ரகுவையும் வென்றனர்.
பரபரப்பான இறுதிப்போட்டியில், பள்ளி மாணவர் ரியான்ஸ் நரசிம்மன், 17-19, 14-12, 11-9, 7-11, 12-10 என்ற புள்ளிகளில் வீராங்கனை யோகிதாவையும் வென்று 'சாம்பியன்ஷிப்' பட்டத்தை தட்டிசென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.