/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிப்பு பலகையில் விஷமிகள் அட்டகாசம்
/
அறிவிப்பு பலகையில் விஷமிகள் அட்டகாசம்
ADDED : செப் 25, 2024 08:30 PM

கிணத்துக்கடவு : சாலையோரம் வைக்கப்படும் நெடுஞ்சாலை அறிவிப்பு பலகைகளில் தகவல்களை அழிக்கும் விஷமிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி வழித்தடங்களில், 'எந்த ஊருக்கு, எந்த பாதையில், எவ்வளவு தொலைவு பயணிக்க வேண்டும்' என்ற தகவலை அறிந்துக் கொள்ள, நெடுஞ்சாலைத்துறையால், ஆங்காங்கே தகவல் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மாநில, தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, கிராமப்புற ரோட்டோரங்களிலும், இத்தகைய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள், தனியாரின் விளம்பரங்களை தாங்கி நிற்கும் நிலையில் உள்ளன. அதேநேரம், சில அறிவிப்பு பலகைகளில் உள்ள தகவல்கள், விஷமிகளால் அழிக்கப்பட்டும் வருகின்றன.
இதனால், வாகன ஓட்டுநர்கள் சரியான வழித்தடம் மற்றும் அதற்கான துாரத்தை அறிந்து கொள்ள முடியாமல், குழப்பம் அடைகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், அவ்வப்போது ஆய்வு செய்து, இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே, குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
கண்காணிப்பு கேமரா உதவியுடன், அறிவிப்பு பலகையில் கைவைக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டுநர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.