தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகப்பேறு மருத்துவ பிரிவுக்கு வேண்டும் 'அவசர சிகிச்சை' :அதிகரிக்கும் பார்வையாளர்களால் சிக்கல்

மகப்பேறு மருத்துவ பிரிவுக்கு வேண்டும் 'அவசர சிகிச்சை' :அதிகரிக்கும் பார்வையாளர்களால் சிக்கல்

மகப்பேறு மருத்துவ பிரிவுக்கு வேண்டும் 'அவசர சிகிச்சை' :அதிகரிக்கும் பார்வையாளர்களால் சிக்கல்


UPDATED : மே 31, 2026 08:22 PM

ADDED : மே 31, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 08:22 PM ADDED : மே 31, 2026 08:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த தாய், சேய் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அதிக எண்ணிக்கையில் வரும் பார்வையாளர்களால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில், தினமும் 20க்கு மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. பிரசவத்துக்கு பின், தாய், சேய் ஆரோக்கியத்திற்கு ஏற்ப ஐந்து நாட்கள் வரை தங்க வைக்கப்படுவர்.

இவர்களுடன் தங்க ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் அனுமதிக்கப்பட்டதை விட கணவன், குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்களும் தங்குவதால், இடநெருக்கடி ஏற்படுகிறது.

தீவிர சிகிச்சை பிரிவின் முன், இருக்கை வசதியுடன் 'ஷெட்', அதன் அருகில் காத்திருப்போர் அறை உள்ளது. அதிக பார்வையாளர்கள் வருவதால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது.

இப்பிரிவுக்கு முன், நீண்டவரிசையில் பலர் படுத்து கொள்வதுடன், ஆங்காங்கே குப்பை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

நோயாளிகளுடன் வந்துள்ளதாக கூறி, மாதக்கணக்கில் சிலர் இங்கே இருப்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

மகப்பேறு பிரிவு துறைத்தலைவர் கீதா கூறுகையில், ''கர்ப்பிணிகளுடன் ஒருவர் மட்டும் தங்கினால், இருக்கும் வசதிகளே போதுமானது. ஆனால், நான்கு பேர் வரை வந்து தங்குகின்றனர். குழந்தைகளுடன் தங்குவதால் வருவோரை வெளியே அனுப்ப முடியாது.

அவ்விடத்தையும் சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பதில்லை. அடிக்கடி குப்பை எடுக்கப்படுகிறது. பொதுமக்களிடம் ஒத்துழைப்பு இருந்தால் தானே, எங்களால் சமாளிக்க முடியும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us