/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் மக்களை கவர்ந்த 'தி ஓசன் டனல் அக்வேரியம்'
/
கோவையில் மக்களை கவர்ந்த 'தி ஓசன் டனல் அக்வேரியம்'
ADDED : ஜூலை 20, 2025 11:35 PM
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மாவட்ட மக்களின் பேராதரவுடன், அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக, 'தி ஓசன் அண்டர்வாட்டர் டனல் அக்வேரியம்', கோவை கொடிசியா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
வரும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ரோபோடிக் நாய்க்குட்டிகள், அமேசான் காட்டுப்பறவைகள், காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கடற்கன்னிகள், கப்பல்கள், மீன் சுரங்கங்கள், எண்ணற்ற பல வகை மீன்கள், மிகக் குறைந்த விலையிலான பர்னிச்சர்களுடன் பர்னிச்சர் மேளா, 10 ரூபாய் முதல் விற்கப்படும் வீட்டு உயயோகப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டு விளையாட்டு அரங்குகள் பொதுமக்களை கவர்ந்த சிறப்பம்சங்கள் ஆகும். ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 149 ரூபாய் நுழைவுக்கட்டணம். வார நாட்களில் மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரையும்; விடுமுறை நாட்களில் காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரையும் நடக்கிறது.

