/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணி நீக்கம் கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
பணி நீக்கம் கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 29, 2024 11:35 PM

அன்னுார்:ஒன்றிய அலுவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, அன்னுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒன்றிய பொறியாளரும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை கண்டித்தும், தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை, அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் பேசினார். பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளர் பீர்முகமது, மாவட்ட துணைத் தலைவர் சாமிநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

