/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு போராடி மீட்ட அதிகாரிகள்

ADDED : மார் 18, 2024 12:47 AM
கோவை;சவுரிபாளையம் சக்திமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 84 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், இரண்டு நாட்களாக போராடி மீட்டனர்.
கோவை சவுரிபாளையத்தில், சக்தி மாரியம்மன், பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இவ்விரண்டு கோவில்களும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான, ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் 2 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, தனி நபர் சிலர் ஆக்கிரமித்திருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் முறைப்படி அறிவுரைகளை வழங்கினர். எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்தனர். ஆனால் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்தன.
இந்நிலையில், கோர்ட் உத்தரவுப்படி கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 10 சென்ட் நிலத்தை மீட்க சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் துணை கமிஷனர் மேனகா தலைமையில், செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வர்கள் கோவில் பணியாளர்கள் நிலத்தை மீட்டனர். 'இந்த நிலம் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமானது; அத்துமீறுபவர்கள் தண்டனைக்குள்ளாவர்' என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர்.
அங்கிருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தினர். அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.