/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதானது 'வாட்டர் ஹீட்டர்' புதியது வழங்க வந்தது உத்தரவு
/
பழுதானது 'வாட்டர் ஹீட்டர்' புதியது வழங்க வந்தது உத்தரவு
பழுதானது 'வாட்டர் ஹீட்டர்' புதியது வழங்க வந்தது உத்தரவு
பழுதானது 'வாட்டர் ஹீட்டர்' புதியது வழங்க வந்தது உத்தரவு
ADDED : பிப் 16, 2024 12:54 AM
- நமது நிருபர் -
பழுதான வாட்டர் ஹீட்டருக்கு பதிலாக, புது வாட்டர் ஹீட்டர் மாற்றி கொடுக்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
பொள்ளாச்சி, ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்த அனுஷ்கான் என்பவர், அங்குள்ள ஏ.கே.பவர் டெக் என்ற நிறுவனம் வாயிலாக, 2018, மே 9ல், 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 'விசெட் சோலார் வாட்டர் ஹீட்டர்' வாங்கினார். அதன் விலை, 54,000 ரூபாய். ஐந்தாண்டுகள் வரை சர்வீஸ் செய்து தருவதாக, உத்தரவாதம் அளித்து இருந்தனர்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகள் பழுது ஏற்படாமல் செயல்பட்ட வாட்டர் ஹீட்டர், 2022ல் திடீரென பழுதானது. புகார் தெரிவிக்கவே, சர்வீஸ் செய்யும் நபரை அனுப்பி வைத்தனர்.
அவர்கள் பரிசோதித்த போது, வாட்டர் ஹீட்டரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது. பழுது நீக்கப்பட்டும் சரியாகாத காரணத்தால், புதிய வாட்டர் ஹீட்டர் மாற்றித்தருமாறு, அனுஷ்கான் கேட்டதற்கு மறுத்துவிட்டனர்.
இதனால், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''மனுதாரருக்கு பழைய வாட்டர் ஹீட்டருக்கு பதிலாக, புதியது வழங்க வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று எதிர்மனுதாரருக்கு உத்தரவிட்டார்.