/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் மண்டிய வீட்டுவசதி வாரிய வளாகம்
/
புதர் மண்டிய வீட்டுவசதி வாரிய வளாகம்
ADDED : ஜன 20, 2025 06:19 AM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பயனாளிகள் இன்னும் முழுமையாக குடியேறாத நிலையில் சாலைகள் பழுதடைந்தும், புதர்கள் மண்டியும் பராமரிப்பு இல்லாமல் கிடைக்கிறது.
பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சிறப்பு திட்டத்தின் சார்பில், 10.81 ஏக்கர் பரப்பில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தில், 1800 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் பயனாளிகளுக்கு சாவிகள் ஒப்படைக்கும் பணி துவங்கியது. தற்போது, 100 முதல், 150 பயனாளிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியேறியுள்ளனர். குடியிருப்புகளை இணைக்கும் ரோடுகள் போதுமான பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து உள்ளது. வளாகத்தில் குடியிருப்போர் வசதிக்காக கட்டப்பட்ட கடைகள் முன் புதர் மண்டி கிடைக்கிறது. குடியேறியவர்களுக்கு பில்லூர் குடிநீர் இதுவரை விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கேன் தண்ணீரையும், பிற இடங்களில் இருந்து நல்ல தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். பயனாளிகள் முழுமையாக குடியேறும் முன் அனைத்து அடிப்படை வசதிகளையும், வீட்டு வசதி வாரியம் செய்த தர வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.