/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் மண்டி கிடக்கும் படகுத்துறை பூங்கா சூலுார் மக்கள் விரக்தி
/
புதர் மண்டி கிடக்கும் படகுத்துறை பூங்கா சூலுார் மக்கள் விரக்தி
புதர் மண்டி கிடக்கும் படகுத்துறை பூங்கா சூலுார் மக்கள் விரக்தி
புதர் மண்டி கிடக்கும் படகுத்துறை பூங்கா சூலுார் மக்கள் விரக்தி
ADDED : ஜன 29, 2024 11:14 PM

சூலுார்;சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் பெரிய குளத்தை ஒட்டி, படகுத்துறை உள்ளது. இதன் அருகில் சிறுவர் பூங்கா உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதால், பூங்கா முழுக்க புதர் மண்டி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரக்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சூலுார் பொதுமக்கள் கூறியதாவது:
விடுமுறை நாட்களில் பொழுது போக்க குழந்தைகளை படகுத் துறைக்கு அழைத்து வருவது வழக்கம். அங்கு வந்து பார்த்தால், உட்கார தேவையான இருக்கைகள் இல்லை.
படகுத்துறையின் தரைத்தளம் பெயர்ந்து கிடக்கிறது. சுற்றுப்புறம் முழுக்க குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு செல்லலாம் என்றால், பூங்கா முழுக்க முட்செடிகள், பார்த்தீனிய செடிகள் ஆக்கிரமித்து புதர் மண்டி கிடக்கிறது. மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து கிடக்கிறது.
விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி உள்ளன. முறையாக பராமரிக்கப்பட்டு வந்த அந்த பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. நிர்வாகம் பூங்காவை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தால், குழந்தைகளுடன் அச்சமின்றி பொழுதை கழிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.