/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தேச துரோகிகளுக்கு வழங்கும் அனுமதி தேசத்தை நேசிப்பவர்களுக்கு கிடையாது'

ADDED : டிச 21, 2024 07:02 AM

கோவை: ''தேச துரோகிகளுக்கு ஊர்வலம் நடத்த, அனுமதி கொடுக்கும் இந்த அரசு, தேசத்தை நேசிப்பவர்களுக்கு, ஊர்வலம் நடத்த அனுமதி அளிப்பதில்லை. இதுவே இன்றைய தமிழகத்தின் நிலை,'' என்று வானதி சீனிவாசன் கூறினார்.
கோவையில் நேற்று மாலை நடந்த கருப்பு தின பேரணியில், தடையை மீறி செல்ல முயன்ற பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பயங்கரவாதிகளுக்கும், அதற்கு துணைபோகும் அரசியல் கட்சிகளுக்கும், எப்போதும் மக்கள் ஆதரவு கொடுக்கக் கூடாது. பயங்கரவாதிகளையும், குண்டு வைத்தவர்களையும் தியாகிகளாக சித்தரிப்பது கண்டிக்கதக்கது. அதற்கு தமிழக அரசு ஒரு போதும் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது. ஆனால் தொடர்ந்து ஆதரவு அளிப்பதோடு, சலுகைகளையும் வழங்கி வருவது கண்டிக்கத்தக்கது. கோவையிலுள்ள ஒவ்வொரு இந்துவும், இதை புரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
இவ்வாறு, வானதி சீனிவாசன் கூறினார்.