/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமணத்துக்கு அழைக்க வந்தவர் மரணம்
/
திருமணத்துக்கு அழைக்க வந்தவர் மரணம்
ADDED : ஆக 16, 2025 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சென்னை, தியாகராய நகர், காவேரி நகரை சேர்ந்தவர் மாசிலாமணி,59; இவரது மகளுக்கு, வரும் 29ல் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக கோவைக்கு வந்தார். ராம்நகர், செங்குப்தா வீதியிலுள்ள, அக்கா உமாராணிக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, இரவு தங்கினார். அப்போது, மாசிலாமணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாசிலாமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.