/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பர்தா சேலஞ்ச்' வீடியோ வெளியிட்டவர் கைது
/
'பர்தா சேலஞ்ச்' வீடியோ வெளியிட்டவர் கைது
UPDATED : செப் 10, 2024 11:29 PM
ADDED : செப் 07, 2024 11:29 PM
கோவை:கோவையை சேர்ந்த 'யூ டியூபர்' அனாஸ் அகமது,22. இவர் பொது இடங்களுக்கு வரும் மக்களிடம் சேலஞ்ச் வீடியோ எடுத்து வெளியிட்டு வந்தார். சில நாட்களுக்கு முன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்களிடம், 'பர்தா சேலஞ்ச்' என்ற பெயரில்'பர்தா' அணியும்படி கேட்டு, அதை வீடியோவாக எடுத்துள்ளார்.
தொடர்ந்து, பர்தா அணியும் பெண்களிடம், பர்தா அணிந்தால் நன்றாக உள்ளது எனவும் பேசியுள்ளார். அத்துடன் பர்தா அணிந்தவர்களுடன், செல்பி மற்றும் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனாஸ் அகமதை கைது செய்தனர். மேலும் இது போல் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படக்கூடாது எனவும், வீடியோவை நீக்கவும் சொல்லி எச்சரித்தனர்.