/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தின் துாண்கள் போஸ்டரால் அலங்கோலம்
/
மேம்பாலத்தின் துாண்கள் போஸ்டரால் அலங்கோலம்
ADDED : அக் 26, 2025 11:27 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மேம்பால தூண்களில் அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த மேம்பால தூண்களில் 'போஸ்டர் ஒட்டக்கூடாது' என அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது.
ஆனால், எச்சரிக்கையை மீறி அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர்கள் அனைத்து தூண்களிலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால், மேம்பால துாண்கள் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அவ்வப்போது பணியாட்களை நியமித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றம் செய்கின்றனர். எச்சரிக்கை அறிவிப்பு இருந்தாலும், போஸ்டர் ஒட்டுவது மட்டும் தடைபடவில்லை.
இதைத் தவிர்க்க, ஒவ்வொரு தூணிலும் விழிப்புணர்வு வாசகங்கள், மக்களுக்கு தேவையான முக்கிய திட்டங்கள் மற்றும் வண்ண ஓவியங்கள், ஊரின் சிறப்பு போன்றவைகளை ஓவியமாக வரைய வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

