/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட வீரர்
/
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட வீரர்
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட வீரர்
இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட வீரர்
ADDED : மே 04, 2025 10:34 PM

கோவை,; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், இரண்டாவது டிவிஷன் 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் பி.லிட்., டிராபி' போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., 'சி' உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது. காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமியும், ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி. அணியும் மோதின.
பேட்டிங் செய்த காஸ்மோ வில்லேஜ் அணி, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 229 ரன்கள் எடுத்தது. அணி வீரர்கள் ராஜேஷ், 31 ரன்கள், முகேஷ், 59 ரன்கள், ரியாஸ், 45 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் நவீன் குமார் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய, ரெயின்போ அணியினர், 42.3 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர்கள் பிரவின் எட்வர்டு, 55 ரன்களும், கணேஷ்பாபு, 31 ரன்களும், சுகேந்திரன், 36 ரன்களும், மித்துன், 35 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.
அதேபோல், ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும், ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த ரெயின்போ கிளப் அணியினர், 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 234 ரன்கள் எடுத்தது.
வீரர்கள் ஹரிஹரன், 68 ரன்களும், ஆதித்யன், 64 ரன்கள், சூரியகாந்த், 32 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் பார்த்திபன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் அணியினர், 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 111 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
அதிகபட்சமாக வீரர் ஜீவா, 37 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் ராமநாராயணன் ஆறு விக்கெட்கள் வீழ்த்தி, வெற்றிக்கு வழிவகுத்தார்.