/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சதுரங்க போட்டியில் வீரர்கள் அசத்தல்
/
சதுரங்க போட்டியில் வீரர்கள் அசத்தல்
ADDED : பிப் 19, 2024 12:09 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடைபெறும் சதுரங்க போட்டியில், வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி, அசத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம், கோவை மாவட்ட சதுரங்க கழகம், மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரி சார்பில், 18வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்து வருகின்றன.
அதில், ஏழாவது சுற்றின் முடிவில் கோவையைச்சேர்ந்த ஆகாஷ், சாய் அக்னி ஜீவிதேஷை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்து, ஐந்து புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் அஜய் சந்தோஷ் பர்வதரெட்டி மற்றும் சிட்னிகோவ் அன்டோன் 4.5 புள்ளிகளுடன் உள்ளனர். தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

