/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு வண்டி ஓட்டிய போலீஸ் கமிஷனர்!
/
மாட்டு வண்டி ஓட்டிய போலீஸ் கமிஷனர்!
ADDED : ஜன 15, 2024 01:20 AM
கோவை;தமிழகத்தில் பல்வேறு அரசு, தனியார் கல்லுாரிகள், அலுவலகங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மற்றும் போலீசாருக்கும், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
போலீஸ் குடும்பத்தினர் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உட்பட, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
அதன் பின், மாநகர் போலீசார் சார்பில் பொங்கல் வைத்தல், நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாட்டு வண்டி ஓட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
அதை தொடர்ந்து, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற போலீசார் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு, பரிசுகள் அளிக்கப்பட்டன.