/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 9ல் போராட்டம்; கூட்டத்தில் முடிவு
/
வரும் 9ல் போராட்டம்; கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூலை 03, 2025 09:25 PM
வால்பாறை; தமிழகத்தில், வரும் 9ம் தேதி நடக்கவுள்ள, பொதுவேலை நிறுத்த போராட்டத்தில், கோவை மாவட்டத்தில் வால்பாறை, சூலுார், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொது வேலை நிறுத்தம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் நடந்தது. கூட்டத்துக்கு, எல்.பி.எப்., தொழிற்சங்க தலைவர் வினோத்குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வால்பாறையில் வரும் 9ம் தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என்றும், கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை நகரில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.