/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடல் கன்னி கண்காட்சியை கண்டு ரசிக்கும் பொதுமக்கள்
/
கடல் கன்னி கண்காட்சியை கண்டு ரசிக்கும் பொதுமக்கள்
ADDED : ஜூலை 16, 2025 09:21 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், கோவை ரோட்டில் டாக்டர் ஜெகதீசன் சர்க்கஸ் மைதானத்தில் 'இந்தியன் கன்ஸ்யூமர் என்டர்டைனர்' சார்பில் கடல் கன்னி கண்காட்சி கடந்த ஜூன் மாதம் முதல், வரும், 20ம் தேதி வரை நடக்கிறது.
அழகிய வண்ண மீன்கள் அரங்கின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் ஆழ்கடலுக்குள் இருப்பது போன்ற வடிவமைப்பில் அரங்குகள் தத்ரூபமாக உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் கன்னிகள் நடத்தும் கண்கவர் சாகசங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. தேவையான பொருட்கள், உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் டனல் வியூ, அம்யூஸ்மென்ட் பார்க், ராட்டினம், குழந்தைகளுக்கான தனி விளையாட்டு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. தினமும், மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.