/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் நடைமேடையை நீட்டிக்கணும்!
/
ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் நடைமேடையை நீட்டிக்கணும்!
ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் நடைமேடையை நீட்டிக்கணும்!
ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் நடைமேடையை நீட்டிக்கணும்!
ADDED : பிப் 14, 2024 11:20 PM
கிணத்துக்கடவு, - கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் நடைமேடை அளவை நீட்டிக்க வேண்டும் என, ரயில் பயணியர்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி ரோட்டில் உள்ளது கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன். இந்த ரயில்வே ஸ்டேஷனை, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில், காலை மற்றும் மாலை நேரத்தில் பயணியர் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், பிளாட்பார்ம் நடைமேடை ரயிலின் நீளத்தை விட குறைவாக இருப்பதால், பயணியர் நீண்ட துாரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.
தற்போது, கிணத்துக்கடவு வழியாக செல்லும் ரயிலில், 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிளாட்பார்ம் நடைமேடை அளவோ,18ரயில் பெட்டி அளவுக்கே உள்ளது. நடைமேடை இல்லாத பகுதியில் ரயில் படிக்கட்டுகளில் ஏறுவதும், இறங்குவதும் சிரமமாக உள்ளது.
எனவே, பிளாட்பார்ம் நடைமேடை அளவை நீட்டிக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.

