/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது ராமாயணம்'
/
'அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது ராமாயணம்'
'அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது ராமாயணம்'
'அறம் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது ராமாயணம்'
ADDED : அக் 04, 2025 11:31 PM
கோ வை கம்பன் கலைக்கூடத்தின் ஏழாம் ஆண்டு விழா, சவுரிபாளையத்தில் நடந்தது. கம்பன் கலைக்கூட தலைவர் சுப்ரமணியம் தலைமை வைத்தார்.
கவிஞர்கள் சந்திர பிரியா, சுமதி, அனுராதா ஆகியோர் இணைந்து எழுதிய, 'கவிக்கோர்வை' என்ற நுாலை டாக்டர் பன்னீர்செல்வம் வெளியிட, கலையமுதன் பெற்றுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, எழுத்தாளர் புதுக்கோட்டை முருகபாரதி பேசுகையில், ''கம்பர், ராமாயணத்தை எழுதிய பிறகே, ராமர் பிறத்த இடமான அயோத்திக்கும், ராமருக்கும், சீதைக்கும் அதிக பெருமை சேர்ந்தது. ராமாயணத்தின் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவத்துவங்கியது.
மனிதர்கள் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ, ராமாயணம் வழிகாட்டுகிறது. கம்பரின் பாத்திரப் படைப்புகள் அனைத்தும், நீதி நெறி சார்ந்தும், அறம் சார்ந்தும் படைக்கப்பட்டு இருப்பதால், பல ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், மக்கள் மனதில் ராமாயணம் நிலைத்து நிற்கிறது,'' என்றார்.
அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ,- மாணவியருக்கு ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.