/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினம், தினம் 'தொங்கல் பயணம்' பயணம்; அதிக பஸ் இயக்காததே காரணம்
/
தினம், தினம் 'தொங்கல் பயணம்' பயணம்; அதிக பஸ் இயக்காததே காரணம்
தினம், தினம் 'தொங்கல் பயணம்' பயணம்; அதிக பஸ் இயக்காததே காரணம்
தினம், தினம் 'தொங்கல் பயணம்' பயணம்; அதிக பஸ் இயக்காததே காரணம்
UPDATED : ஜூலை 14, 2025 07:16 AM
ADDED : ஜூலை 13, 2025 11:36 PM

சென்னைக்கு அடுத்து தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில், வளர்ந்த நகராக உள்ளது கோவை. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர்.
பஸ் போன்ற பொது போக்குவரத்தையே, இம்மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கோவை மண்டலத்தில் உள்ள, 17 பஸ் டிப்போக்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தவிர, ஏராளமான தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இருந்தபோதும் காலை, மாலை போன்ற 'பீக்' நேரங்களில், மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதும், கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதும் நடக்கிறது.
பல அரசு டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் பஸ்களில் இந்த வசதி இல்லாததால், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பதே, விபத்தை ஏற்படுத்தி விடுகிறது.
பெற்றோர் தரப்பிலும், கல்வி நிறுவனங்கள் தரப்பிலும், இந்த ஆபத்தான படிக்கட்டு பயணம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதேசமயம், அதிவேகமாகவும், அலட்சியமுடனும் பஸ்களை இயக்கும் ஒருசில ஓட்டுனர்கள் மீதும் போலீசார், போக்குவரத்து துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.