sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'பெண்கள் சாதனை படைக்க மன உறுதிதான் காரணம்'

/

 'பெண்கள் சாதனை படைக்க மன உறுதிதான் காரணம்'

 'பெண்கள் சாதனை படைக்க மன உறுதிதான் காரணம்'

 'பெண்கள் சாதனை படைக்க மன உறுதிதான் காரணம்'


ADDED : மார் 09, 2026 07:11 AM

Google News

ADDED : மார் 09, 2026 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், பெண் கவிஞர்கள் பங்கேற்ற சிறப்பு கவியரங்கம், ரேஸ்கோர்ஸ் வைஷ்ணவ காம்ப்ளக்ஸ் அரங்கில் நேற்று நடந்தது.

கவியரங்கத்துக்கு கவிஞர் ஆனந்தி தலைமை வகித்தார். கவிஞர்கள் பிரேமா, சவுமியா, விக்னேஷ்வரி, சண்முக தேவி, கிருத்திகா மற்றும் வெ ங்கடலட்சுமி ஆகியோர் கவிதை வாசித்தனர்.

இவர்களுக்கு 'பெண் எனும் மகா சக்தி விருது' வழங்கப்பட்டது. கவிஞர் மால் மறையோன் எழு திய 'மகிழ்ச்சியின் குரல்' என்ற நுால் வெளியிடப்பட்டது. வக்கீல் சிவஞானம் நுால் குறித்து கருத்துரை வழங்கினார்.

உலக மகளிர் தினம் குறித்து, கவிஞர் பெருமாள் பேசியதாவது:

பெண் சக்திதான் பெரும் சக்தி. பெண்களுக்கு இருக்கும் மன உறுதி ஆண்களுக்கு இல்லை. கல்வியில், தொழில்நுட்பத்தில் பெண்கள் சாதனை படைக்க அவர்களின் மன உறுதிதான் காரணம். பெண்களின் ஆற்றலுக்கு அணை போடாமல் இருந்தால் போதும்; அவர்களுக்கான வெற்றிப்பாதையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.

இவ்வாறு, அவர் பேசினார்.

கவிஞர்கள் சண்முகம், சுந்தரராமன், பிரசாத், தன்மானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us