தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ் ஸ்டாண்டில் நடனம் யு - டியூபருக்கு சம்மன்

 பஸ் ஸ்டாண்டில் நடனம் யு - டியூபருக்கு சம்மன்

 பஸ் ஸ்டாண்டில் நடனம் யு - டியூபருக்கு சம்மன்


ADDED : மார் 09, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பஸ் ஸ்டாண்ட்டில் முகம் சுளிக்கும் வகையில், நடந்து கொண்ட யு-டியூபரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.

காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில், கேரளாவை சேர்ந்த ஜித்து சாஜி என்ற யு-டியூபர் ஒருவர் சேலை அணிந்து வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.

பஸ் ஸ்டாண்ட்டுக்குள் ஓடுவது, மற்றொரு இளைஞருடன் சேர்ந்து நடனமாடுவது என, வீடியோக்களை எடுத்தார். இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இளைஞரின் இச்செயல் அங்கிருந்தவர்களை முகம்சுளிக்க வைத்தது.

பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டது. போலீசார் இதுகுறித்து விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், 'ஜிஸ்.மோன் என்ற அவரின் இன்ஸ்டாகிராம் ஐ.டி., கேரளாவைச் சேர்ந்தது. தமிழகம், கேரளாவில் உள்ள பல பொது இடங்களில் நடனமாடி தொந்தரவை ஏற்படுத்தியுள்ளார். அவர்களுக்கு போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளோம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us