/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரம்பால் அடித்துக்கொண்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்
/
பிரம்பால் அடித்துக்கொண்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்
பிரம்பால் அடித்துக்கொண்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்
பிரம்பால் அடித்துக்கொண்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்
ADDED : ஆக 06, 2025 10:24 PM

கோவை; கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கல்வி உரிமையை ஏழை குழந்தைகளுக்கு பெற்றுத்தர முடியவில்லையே என, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தங்களை தாங்களே, பிரம்பால் அடித்து துன்பு றுத்திக்கொண்டு, மன்னிப்பு கோரினர்.
'கட்டாய கல்வி உரிமை சட்டத்தை, தமிழக அரசு நடைமுறைப்படுத்த தாமதம் செய்வதாலும், கல்வியாண்டு துவங்கி இரண்டு மாதங்களாகியும், மத்திய அரசு நிதி விடுவிக்காததாலும் ஏழை குழந்தைகள் சிரமப்படுகின்றனர்; இந்த ஆண்டு, பல லட்சம் குழந்தைகளின் கல்வி உரிமையை பெற்றுத்தர முடியவில்லை என்பதற்காக, தமிழக குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறோம்' என்று கூறியபடி, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமையில், தொண்டர்கள் பிரம்பால் அடித்துக்கொண்டனர்.