/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதியில்லை; 'டான்டீ' தொழிலாளர்கள் பரிதவிப்பு
/
குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதியில்லை; 'டான்டீ' தொழிலாளர்கள் பரிதவிப்பு
குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதியில்லை; 'டான்டீ' தொழிலாளர்கள் பரிதவிப்பு
குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதியில்லை; 'டான்டீ' தொழிலாளர்கள் பரிதவிப்பு
ADDED : ஜன 15, 2024 09:58 PM
வால்பாறை:சின்கோனா (டான்டீ) தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில், அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
வாலபாறை அடுத்துள்ளது சின்கோனா. இங்கு தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) உள்ளது.
இங்குள்ள, ரயான், லாசன் ஆகிய இருசரகங்களிலும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, டான்டீ தேயிலை தோட்டத்தில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் உள்ளன.
இந்நிலையில், இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. கடந்த நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாழடைந்த வீடுகளில் தான் தொழிலாளர்கள் தற்போதும் வசிக்கின்றனர்.
புதர் சூழ்ந்த பகுதியில் தொழிலாளர் குடியிருப்பு அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் வனவிலங்குகள் நிரந்தரமாக முகாமிட்டு, தொழிலாளர்களை அச்சுறுத்துகின்றன.
மேலும், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளதால், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இது குறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:
'டான்டீ' தேயிலை தோட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உயிரை பணயம் வைத்து நாள் தோறும் தேயிலை பறிக்கும் பணிக்கு சென்று வருகிறோம்.
இங்குள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.
வீடுகளை சுற்றிலும் புதர் மண்டிக்கிடப்பதால் மாலை நேரத்தில் சிறுத்தையும், இரவு நேரத்தில் யானைகளும் உலா வருகின்றன. தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். மேலும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை தொகை வழங்குவதில் நிர்வாகம் தாமதம் செய்கிறது.
இவ்வாறு, கூறினர்.