/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர பனை மரம் முறிந்து விழும் அபாயம்
/
ரோட்டோர பனை மரம் முறிந்து விழும் அபாயம்
ADDED : பிப் 16, 2025 10:09 PM

நெகமம், ; வகுத்தம்பாளையம் - தேவணாம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில், பனை மரம் முறிந்து விழும் நிலையில் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
நெகமம் அருகே உள்ள, வகுத்தம்பாளையம் --- தேவணாம்பாளையம் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இவ்வழியில் விவசாயிகள் பலர் தங்கள் விளை பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
இதில், இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள பனை மரத்தின் அடிப்பகுதியில் பொந்தாக (ஓட்டை) காணப்படுகிறது. இந்த மரம் எப்போது வேண்டு மானாலும் கீழே சாயும் நிலையில் உள்ளது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் இந்த மரத்தை கடந்து செல்லும் போது அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இந்த மரத்தை அகற்றம் செய்ய வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்துகின்றனர்.