/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுப்பொலிவு பெறுகிறது ரோடு; நெடுஞ்சாலைத்துறை சுறுசுறுப்பு
/
புதுப்பொலிவு பெறுகிறது ரோடு; நெடுஞ்சாலைத்துறை சுறுசுறுப்பு
புதுப்பொலிவு பெறுகிறது ரோடு; நெடுஞ்சாலைத்துறை சுறுசுறுப்பு
புதுப்பொலிவு பெறுகிறது ரோடு; நெடுஞ்சாலைத்துறை சுறுசுறுப்பு
ADDED : ஜன 16, 2024 11:27 PM
கோவை;கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, கோவையில் நடைபெற இருப்பதால், முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள மண்ணை அகற்றி, மையத்தடுப்புகளில் கருப்பு, வெள்ளை நிற பெயின்ட் பூசும் பணியில், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, வரும், 19 முதல், 31 வரை தமிழகத்தில் நடைபெறுகிறது. இதில், கூடைப்பந்து மற்றும் தாங் டா போட்டிகள், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த மைதானத்துக்கு செல்லும் வழித்தடங்களில் சாலைகளை சீரமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளங்கள் காணப்படும் பகுதியில், பேட்ச் ஒர்க் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அவிநாசி ரோட்டில் மேம்பால வேலை நடப்பதால், பெரும்பாலான இடங்களில் மின் விளக்கு இல்லை. தேவைப்படும் இடங்களில் மின் விளக்கு பொருத்தவும், மாநகராட்சிக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

