/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லங்கா கார்னரில் ரவுண்டானா... உயர் கோபுர விளக்கு வெளிச்சத்தில் பிரகாசிக்கப் போகிறது ஏரியா
/
லங்கா கார்னரில் ரவுண்டானா... உயர் கோபுர விளக்கு வெளிச்சத்தில் பிரகாசிக்கப் போகிறது ஏரியா
லங்கா கார்னரில் ரவுண்டானா... உயர் கோபுர விளக்கு வெளிச்சத்தில் பிரகாசிக்கப் போகிறது ஏரியா
லங்கா கார்னரில் ரவுண்டானா... உயர் கோபுர விளக்கு வெளிச்சத்தில் பிரகாசிக்கப் போகிறது ஏரியா
ADDED : ஆக 05, 2025 11:59 PM
கோவை; கோவை லங்கா கார்னர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாநகராட்சி செலவில், 'ரவுண்டானா' அமைக்கப்படுகிறது.
கோவையில் உள்ள முக்கியமான சந்திப்புகளை, தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது. ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் எதிரே ஏற்பட்ட போக்குவரத்து குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், 'ரவுண்டானா' அமைக்கப்பட்டது.
இதேபோல், லங்கா கார்னர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர் கள ஆய்வு செய்து, 'டிசைன்' தயாரித்துக் கொடுத்தனர்.
முதலில், மணல் மூட்டைகள் அடுக்கி, சோதனை முறையில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. பின், மையத்தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் அனுப்பப்படுகின்றன.
இந்நடைமுறை பயனுள்ளதாக இருப்பதாலும், வாகனங்கள் தேங்காமல் செல்வதாலும், நிரந்தரமாக 'ரவுண்டானா' அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அவ்விடத்தை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
'ரவுண்டானா' அமைப்பதால், வாகன போக்குவரத்து எவ்வாறு சீராக செல்லும் என்பதை அதிகாரிகள் விளக்கினர். லங்கா கார்னர் சந்திப்பில், மாநகராட்சி செலவில், 'ரவுண்டானா' அமைக்கும் பணி விரைவில் துவங்க இருக்கிறது.
இந்த பகுதியில் உயர்கோபுர விளக்கும் அமைக்கப்படவுள்ளது. அரசு மருத்துவமனை முன் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை, எதிர்திசையில் உள்ள வாலாங்குளம் கரையில் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல், பெரிய கடை வீதி, கூட்ஸ் ஷெட் ரோடு சந்திக்கும் சிக்னல் பகுதியிலும், கோட்டைமேட்டில் இருந்து வரும் வாகனங்கள் தேங்காமல் பயணிப்பதற்கும் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு அதிகாரிகள் கள ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.