/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துருப்பிடிக்கும் துாரிப்பாலத்தை பாதுகாக்க வேண்டும்
/
துருப்பிடிக்கும் துாரிப்பாலத்தை பாதுகாக்க வேண்டும்
துருப்பிடிக்கும் துாரிப்பாலத்தை பாதுகாக்க வேண்டும்
துருப்பிடிக்கும் துாரிப்பாலத்தை பாதுகாக்க வேண்டும்
ADDED : ஆக 22, 2025 11:26 PM

மேட்டுப்பாளையம்:ஊட்டி சாலையில் கல்லாறில் உள்ள தூரிப்பாலம், எவ்வித பராமரிப்பு செய்யாததால் துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி சாலை கல்லாறில், கோவை, நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு பாலமாக, 1925ம் ஆண்டு துரிப்பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு, தூரிப்பாலத்தின் அருகே, துாண்கள் அமைத்து, புதிய கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. அதன் பிறகு துாரிப்பாலத்தின் வழியாக எந்த வாகனங்களும் செல்லவில்லை. இரும்பு ராடுகளால் அமைந்துள்ள இப்பாலம், பராமரிக்காததால், துருப்பிடிக்க தொடங்கியது. தனியார் மோட்டார் சைக்கிள் கம்பெனி நிர்வாகம், இப்பாலத்தை பராமரிக்க முன்வந்து, ஓடந்துறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தது. இதற்கான கல்வெட்டை, 2023ம் ஆண்டு, திறந்து வைத்து, பாலத்தை பராமரிப்பதாக உறுதியளித்தனர். தற்போது எவ்வித பராமரிப்பும் இல்லாததால், துாரிப்பாலம் துருப்பிடிக்கத் தொடங்கி உள்ளது. கல்வெட்டையும் யாரோ சிலர் உடைத்து சேதம் செய்துள்ளனர். பாலத்தைச் சுற்றி செடிகள் புதர் போல் வளர்ந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம், கல்லாறு துாரிப்பாலத்தை நினைவுச் சின்னமாக்கி, நன்கு பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.