/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு வழக்கில் ஒரே குற்றவாளி; தலா 3 ஆண்டு சிறை
/
இரு வழக்கில் ஒரே குற்றவாளி; தலா 3 ஆண்டு சிறை
ADDED : ஜன 31, 2024 11:05 PM
வால்பாறை- இரு வேறு வழக்குகளில் ஒரே குற்றவாளிக்கு, தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வால்பாறை கலைஞர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி, 47. இவர், கடந்த 2018 ஜூலை மாதம் 27ம் தேதி, வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்து, அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட தங்க தாலி, வெள்ளி கீரீடம் ஆகியவற்றை திருடினார்.
இந்த வழக்கை விசாரித்த வால்பாறை கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார், மேற்படி குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
* வால்பாறை பொதுப்பணித்துறை அலுவலகத்தில், கடந்த 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 13ம் தேதி, லேப்டாப், காஸ் சிலிண்டர் திருடிய வழக்கிலும், கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பு வழங்கினார்.
இரு வேறு இடங்களில் திருடிய வழக்கில் ஒரே குற்றவாளிக்கு, தலா மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிதக்கது.