/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி சம்ஹிதா அகாடமி விளையாட்டு விழா
/
தி சம்ஹிதா அகாடமி விளையாட்டு விழா
ADDED : அக் 29, 2024 09:12 PM

கோவை: மலுமிச்சம்பட்டி, தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் கடந்த, 25 முதல், 27ம் தேதி வரை விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் புஷ்பஜா போட்டிகளை துவக்கிவைத்தார். மாணவர்கள் வாயு, அக்னி, பிருத்வி மற்றும் ஜல் என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நான்கு குழுக்களின் அணிவகுப்பு மரியாதையை பள்ளி முதல்வர் ஏற்றுக்கொண்டு, ஒலிம்பிக் விளக்கு ஏற்றினார்.
'மாஸ் டிரில்', ஜூம்பா நடனம் ஆகியவற்றை அடுத்து, வளையம் தாண்டுதல், தடை ஓட்டம், வண்ண பந்து சேகரிப்பு, 200மீ., 400 மீ., ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு தலைவர் ஞானராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதா, காந்திநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.