/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு அறிவிக்கும் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையணும்!
/
அரசு அறிவிக்கும் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையணும்!
அரசு அறிவிக்கும் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையணும்!
அரசு அறிவிக்கும் திட்டங்கள் விவசாயிகளை சென்றடையணும்!
ADDED : செப் 16, 2025 09:59 PM

ஆனைமலை; 'மத்திய, மாநில அரசு திட்டங்கள், விவசாயிகளை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தமிழ்நாடு விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஆலோசனை கூட்டம், கோட்டூர், மயிலாடுதுறையில் நடந்தது. ஆனைமலை ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தென்னை விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசித்தனர்.
மாவட்ட தலைவர் கூறியதாவது:
ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. - கம்யூ. கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் இதற்கான காலம் கணிந்துள்ளது. தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் கலந்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும்.
விளை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, அரசு காட்டுப்பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விடவோ, சுட்டு பிடிக்கவோ உத்தரவிட்டது.
இதை முறையாக நடைமுறைப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும்.
விவசாயத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அரசு திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.