/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுபூளையும், ஆவாரையும் சிறுநீரகத்தின் நண்பர்கள்! பொங்கல் காப்புக்கட்டும் பூக்களின் ரகசியம்

ADDED : ஜன 14, 2025 06:52 AM

கோவை; பொங்கல் பண்டிகையில் காப்புக் கட்டும்போது, ஆவாரம்பூ, வேப்பிலை, பூளைப்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டுகிறோம். இவை அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவை.
பூளைப்பூவுக்கு சிறுபீளை, சிறுகண்பீளை, கற்பேதி உள்ளிட்ட வேறு பெயர்களும் உள்ளன. நாட்டு மருத்துவம், சித்த மருத்துவத்தில் சிறுபீளைக்கு முக்கிய இடம் உண்டு.
சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதுடன், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் திறனும், சிறுநீர்ப்பாதையில் உருவாகும் கிருமித் தொற்றுகளை அகற்றும் தன்மையும் இதற்கு உள்ளது.
இந்தப்பூவை நீரில் கொதிக்க வைத்து, சுண்டக் காய்ச்சி பருகுகின்றனர். அரிசிக் கஞ்சியில் பீளைப் பூவை சேர்த்துக் கொதிக்க வைத்து, குடிக்கும் வழக்கமும் உண்டு.
ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியாடினின் அளவைக் குறைக்கும் தன்மை உள்ளது என, ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டு மருந்துக் கடைகளில், சிறுபீளை பொடி விற்பனை செய்யப்படுகிறது. ஈரலைப் பலப்படுத்த உதவும் என, சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புக்கட்டில் கட்டப்படும் ஆவாரம்பூவுக்கும், ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நீரிழிவு நோய் குணமாக இதனைப் பயன்படுத்துகின்றனர். ஆவாரம்பூ கஷாயம், சிறுநீரக கோளாறுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
ஆவாரம்பூ, சிறுபீளை இரண்டுமே காய்ந்தாலும், அதன் மருத்துவ குணத்தை இழக்காதவை. அவற்றை முறையாக பயன்படுத்தும் விதமாகவே நம் முன்னோர், காப்புக் கட்டும் போது இவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.