/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாக்கடையில் கழிவுநீர் நிறைஞ்சு நிக்குது; ராத்திரி கொசுக்கடியால துாக்கம் போகுது
/
சாக்கடையில் கழிவுநீர் நிறைஞ்சு நிக்குது; ராத்திரி கொசுக்கடியால துாக்கம் போகுது
சாக்கடையில் கழிவுநீர் நிறைஞ்சு நிக்குது; ராத்திரி கொசுக்கடியால துாக்கம் போகுது
சாக்கடையில் கழிவுநீர் நிறைஞ்சு நிக்குது; ராத்திரி கொசுக்கடியால துாக்கம் போகுது
ADDED : டிச 23, 2024 04:19 AM

பயமாவே இருக்கு
கோவை, சுந்தராபுரம் அடுத்த ரத்தினம் கல்லுாரி எதிரே, பஸ் நிறுத்தத்தில் உள்ள மின்கம்பத்தில் சிமென்ட் பூச்சுகள் விழுந்து, கம்பம் விழுந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், மாணவ, மாணவியர் அங்கு அதிகமாக நிற்கும் நிலையில், புதிய கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--சங்கர், சுந்தராபுரம்.
சாக்கடை நீர் தேக்கம்
மாநகரில், 19வது வார்டு கணபதி -சத்தி பிரதான சாலை, பாரதியார் நகரில், சாக்கடையில் கழிவுநீர் செல்ல முடியாமல் அடைத்துக் கொண்டிருக்கிறது. துர்நாற்றம் ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. டெங்கு உட்பட பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால், சாக்கடை அடைப்பை சீரமைக்க வேண்டும்.
- -திருமலைசாமி, கணபதி.
சுகாதார சீர்கேடு
பல நாட்களாக, 70வது வார்டு வாணியர் வீதியில் உள்ள குப்பை அகற்றப்படுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குப்பையை முறையாக அகற்றி, இப்பகுதியை சுத்தமாக பராமரித்தால் சிறப்பாக இருக்கும்.
- -ஹரிதாஸ், வாணியர் வீதி.
நாய்களால் தொல்லை
கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் நடை மேடை 1 மற்றும் 1ஏ ஆகியவற்றில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், பலர் அச்சத்தில் உள்ளனர். நடைமேடையில் நாய்கள் வராதவாறு, தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
-- பிரபாகரன், கோவைபுதுார்.
வெளிச்சம் வேண்டும்
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில், 20வது வார்டு போலீஸ் குவாட்டர்ஸ் சாலையில் கடந்த ஒரு மாதமாக Nz.w.20, SB.32, P.2 என்ற எண் கொண்ட கம்பத்தில், விளக்கு எரிவதில்லை. இதனால், இரவில் சமுக விரோதிகள் தொல்லை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
--வெங்கடேஷ், கே.கே.நகர்.
திணறும் வாகனங்கள்
பேரூர் சாலை திருப்பத்தில், குழாய் உடைப்பை சரி செய்தவர்கள், தாறுமாறாக சிமென்ட் போட்டதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இப்பிரச்னையை உடனடியாக சரி செய்தால், அச்சம் இல்லாமல் பயணிக்கலாம்.
-- செந்தில்குமார், பேரூர் செட்டிபாளையம்.
பழுதாகும் சாலை
கோவை மாநகர் 25வது வார்டு, காந்திமாநகர் விளையாட்டு மைதானம் வடக்கு 8வது வீதி, 9வது வீதியில், அத்திக்கடவு தண்ணீர் வரும் நாளன்று, குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகிறது. தண்ணீர் தேங்குவதால், சாலை பழுதாகி வருகிறது. கொசுக்கள் தொல்லை அதிகரிக்கிறது. பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
- -கருப்பையா, காந்திமாநகர்.