/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீ விபத்தில் கடை எரிந்து நாசம்
/
தீ விபத்தில் கடை எரிந்து நாசம்
ADDED : ஜன 15, 2024 10:29 PM
கோவில்பாளையத்தில், தீ விபத்தில் சவுண்ட் சர்வீஸ் கடையில் அனைத்து பொருட்களும் எரிந்து கருகின.
கோவில்பாளையத்தில், துடியலூர் சாலையில், பேரூராட்சி அலுவலகம் எதிரே, தனியார் சவுண்ட் சர்வீஸ் கடை உள்ளது. நேற்று மதியம் திடீரென கடையில் தீ பிடித்தது.
இந்த தீயில் கடையில் வைக்கப்பட்டிருந்த மைக் செட்டுகள், ஸ்பீக்கர்கள், மின் அலங்கார பலகைகள், மூன்று கிரைண்டர்கள் என ஏராளமான பொருட்கள் தீயில் கருகின. கடைக்கு உள்ளே வைக்கப்பட்டிருந்த மூன்று கிரைண்டர்களும் கருகின. தீ 30 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்தது. கடையின் மேற்கூரையும் சேதம் அடைந்தது.
அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில், வீரர்களும், அருகில் உள்ள பொதுமக்களும் இணைந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அனைத்து பொருட்களும் கருகின. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.