/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலக்கல் தேர்த்திருவிழா வரும் 12ம் தேதி துவக்கம்
/
சூலக்கல் தேர்த்திருவிழா வரும் 12ம் தேதி துவக்கம்
ADDED : மே 06, 2025 11:24 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா வரும், 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருத்தேர் முகூர்த்த கால் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு வேல் புறப்பாடு, இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டு விழாவும், 19ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும், 20ம் தேதி இரவு, 7:00 மணிக்கு கம்பம் நடும் விழா, 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம், இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை தினமும் காலை, 8:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், தினமும், இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும், 28ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வழிபாடும், இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 29ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, 30ம் தேதி மாலை, 4:30 மணிக்கு இரண்டாம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல், 31ம் தேதி மாலை, மூன்றாம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூன், 1ம் தேதி மதியம், மஹா அபிேஷகம் நடக்கிறது.