sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மெல்ல நிரம்பும் அல்லிகுளம்: 40 சதவீதம் அத்திக்கடவு நீர்

/

மெல்ல நிரம்பும் அல்லிகுளம்: 40 சதவீதம் அத்திக்கடவு நீர்

மெல்ல நிரம்பும் அல்லிகுளம்: 40 சதவீதம் அத்திக்கடவு நீர்

மெல்ல நிரம்பும் அல்லிகுளம்: 40 சதவீதம் அத்திக்கடவு நீர்


ADDED : ஜன 06, 2025 01:38 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அல்லிகுளம் குளத்தில் 40 சதவீதம் அத்திக்கடவு நீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 258 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் குழாய் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சில குளங்களுக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது.

இந்நிலையில், அன்னூர் பேரூராட்சியை சேர்ந்த, 47 ஏக்கர் பரப்பளவு உள்ள அல்லிகுளம் குளத்துக்கு நேற்று அதிகாலை முதல் மீண்டும் அத்திக்கடவு நீர் வந்தது. தொடர்ந்து எட்டு மணி நேரம் நீர் வரத்து இருந்தது. தற்போது அல்லிகுளம் குளத்தில், 40 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது.

அல்லிகுளம் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், 'கவுசிகா நீர்க் கரங்களுடன் இணைந்து, 68வது வாரமாக இன்று (நேற்று) களப்பணி செய்துள்ளோம். இதுவரை அரசு, பூவரசு, ஆல் ஆகிய மரக்கன்றுகளும், அரளிச்செடிகளும் நடப்பட்டுள்ளன.

குளம் ஆழப்படுத்தப்பட்டு பல்லுயிர் பெருக்கத்திற்காக குளத்தின் மையத்தில், 100 அடி நீளம், 80 அடி அகலம், 30 அடி உயரம் உள்ள மண் திட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 கி.மீ., தொலைவுக்கு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடைமடை பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று காலை 7:00 மணி முதல் 9;00 மணி வரை களப்பணி நடக்கிறது. குளத்தில், 40 சதவீதம் நீர் நிரம்பியதால் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. களப்பணியில் உதவ விரும்புவோர், 90039 26528 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us