UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:44 PM
வால்பாறை: சோலையாறு அணை பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில் இருந்து, 25 கி.மீ.,தொலைவில் சோலையாறு அணை அமைந்துள்ளது. இதை சுற்றியுள்ள பகுதிகளில் ேஷக்கல்முடி, முருகாளி, புதுக்காடு, சேடல்டேம், உருளிக்கல், பன்னிமேடு உள்ளிட்ட எஸ்டேட்கள் உள்ளன. இந்த பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
சோலையாறுடேம் பகுதியில் சுற்றுலாபயணியர் தவறி விழுந்து உயிர்பலியாகும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. மேலும் தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், வால்பாறையில் இருந்து தீயணைப்பு வாகனம் செல்வதற்குள், பெரிய அளவில் சேதமும், உயிரிழப்பும் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், ‘சோலையாறு அணைக்கு தீயணைப்பு வாகனம் வருவதற்கு, 45 நிமிடம் ஆகிறது. எனவே, சோலையாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
