/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு: கலெக்டர் அனுமதிக்கு காத்திருப்பு
/
குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு: கலெக்டர் அனுமதிக்கு காத்திருப்பு
குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு: கலெக்டர் அனுமதிக்கு காத்திருப்பு
குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு: கலெக்டர் அனுமதிக்கு காத்திருப்பு
ADDED : பிப் 12, 2024 11:22 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பேரூராட்சி குப்பையை கொட்ட இடம் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி குப்பையை, கிரீன் கார்டன் சிட்டியில் குவிக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியினர் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனர். குப்பை கொட்டும் இடத்தில் தீ வைத்து எரிப்பதால், அப்பகுதியினர் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள், போலீஸ், தாசில்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம், அங்கு குப்பை கொட்ட வேண்டாம் என மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில், தாசில்தார் சிவகுமார், டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் அப்பகுதி பொதுமக்கள், குப்பை கொட்ட வேறு இடம் தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில், கோதவாடி செல்லும் ரோட்டில் கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாறை குழி மற்றும் கிரீன் கார்டன் சிட்டி பின் பகுதியில் உள்ள 75 சென்ட் காலி நிலத்தில் குப்பை கொட்டலாம் என, தாசில்தார் தெரிவித்தார்.
இதில், ஏதேனும் ஒரு இடம் தேர்வு செய்து அதற்கு குப்பை கொட்ட மனு அளிக்க வேண்டும். இதற்கு கோவை மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும், என, பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார்.
மேலும், பேரூராட்சி நிர்வாகம் தேர்வு செய்த இடத்துக்கு உரிய அனுமதி வந்ததும், புதிய இடத்தில் பேரூராட்சி குப்பை கொட்டப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.