/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உள்ளம் கவர்ந்த 'மலைக்கள்ளன்' மதுக்கரையில் உருவானது பாடல்!
/
உள்ளம் கவர்ந்த 'மலைக்கள்ளன்' மதுக்கரையில் உருவானது பாடல்!
உள்ளம் கவர்ந்த 'மலைக்கள்ளன்' மதுக்கரையில் உருவானது பாடல்!
உள்ளம் கவர்ந்த 'மலைக்கள்ளன்' மதுக்கரையில் உருவானது பாடல்!
ADDED : ஜூலை 20, 2025 01:37 AM

'அப்டீங்களா... ஆச்சரியமா இருக்கே, நம்ம கோயம்புத்துார்ல இப்படியெல்லாம் நடந்திருக்கா...' என, பழைய நிகழ்வுகளை, 'ரீவைண்ட்' பண்ணும் பகுதி இது!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை, பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக நிலை நிறுத்திய படங்களில், 'மலைக்கள்ளன்' முக்கியமானது.
கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. ஸ்ரீராமுலு நாயுடு இயக்கினார். 1954ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி வெளியானது.
எம்.ஜி.ஆர்., நடிப்பில், ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம். குடியரசு தலைவர் விருது பெற்ற, முதல் தமிழ் படம் என்ற பெருமைக்குரியது. இத்திரைப்படத்தில் வரும் ஒரு பாடல், சுந்தராபுரம் அருகே உள்ள மலை மீது படமாக்கப்பட்டது.
இதுகுறித்து தெரிந்த தகவலை கூறி சிலாகிக்கிறார், கோவைப்புதுாரை சேர்ந்த முன்னாள் தபால் அலுவலர் ஹரிஹரன்...
''எம்.ஜி.ஆர்., நடித்து வெளியான மலைக்கள்ளனில் வரும் ஒரு பாடல், இயற்கை எழில் சூழந்த மதுக்கரை மலை மீது, மாதக்கணக்கில் படமாக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., - பானுமதி ஆகியோர் பாடும் படக்காட்சி எடுக்கப்பட்டது,''
''சினிமா சூட்டிங் பார்க்க, இப்பகுதி மக்கள் அவ்வளவாக யாரும் ஆர்வம் காட்டவில்லை. திரைப்படம் வந்தால், தியேட்டரில் ரசிப்பதோடு சரி.
திரைப்படம் குறித்த சில விஷயங்கள் தெரிவிக்க, இங்குள்ள தபால் நிலையத்தில் இருந்து சென்னைக்கு, தந்தி கொடுத்துள்ளனர்,''''கோவை கர்நாடிக் தியேட்டரில் இப்படம் திரையிட்ட நாள், கட்டுக்கடங்காத கூட்டம். திரைப்படச்சுருள் அடங்கிய பெட்டி தயாராகாததால், மாலைதான் திரையிடப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது,''.
இது போன்ற சுவையான பல தகவல்கள், உங்களிடமும் இருக்கலாம். இருந்தால், 98940 09201 என்ற எண்ணை அழைத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.